தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி இருந்து வந்தது.

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கும் பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல். அதே போல் அதிமுகவும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கிறது.

கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்தல்களில் பதிவான வாக்குக்குள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. 

இதனிடையே நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அகில இந்திய அளவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என தெரியவந்தள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் திமுகவே  வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் . இன்று இரவு திடீரென கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த  இருந்த அவர் பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார். 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராவார் என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவர் கருணாநிதி நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.