பாஜக நினைத்தால் தமிழகத்தில் அது கண்டிப்பாக நடக்கும் ..! பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின்  பரபரப்பு பேச்சு..! 

தமிழகத்தில் பாஜக நினைத்தால் அதிமுக ஆட்சியை கலைத்து விடும் என தற்போது பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரவாண்டி நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் திமுக மற்றும் அதிமுக  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியான செம்பொன் என்ற பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம்..150 நாட்கள் ஆக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தோம். தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம். தற்போது தமிழகத்தில் நிலவக்கூடிய ஆட்சியில் கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதியோர் உதவி தொகை வழங்குவதிலும் கூட பாரபட்சம் காட்டி வருகின்றனர்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்த ஒரு ஆதரவும்  கிடைப்பதில்லை. பாஜக நினைத்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என பிரச்சாரம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.