Asianet News TamilAsianet News Tamil

திருநீரை தரையில் கொட்டி திமிரை காட்டிய ஸ்டாலின்... பொங்கி எழுந்த பொன்னார்..!

ஸ்டாலின் அவருக்கு வழங்கப்பட்ட திருநீரை எடுத்து தரையில் கொட்டிவிட்டு வரக்கூடிய அளவில் இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்த ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

stalin must apologize...pon radhakrishnan demands
Author
Kanyakumari, First Published Nov 3, 2020, 6:04 PM IST

ஸ்டாலின் அவருக்கு வழங்கப்பட்ட திருநீரை எடுத்து தரையில் கொட்டிவிட்டு வரக்கூடிய அளவில் இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்த ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலோ, 2021 சட்டப் பேரவை பொதுத்தேர்தலோ எது வந்தாலும் சந்திக்கின்ற வகையில் பாஜகவின் கட்சி ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும், உத்வேகமும்,உற்சாகமும் இருப்பதைக் காண முடிகிறது.

stalin must apologize...pon radhakrishnan demands

தெய்வங்களையும், தெய்வ சின்னங்களையும் கொச்சைப்படுத்துவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விருப்பமுடைய ஒன்றாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஏற்கெனவே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்றபோது அவருக்கு மரியாதை கொடுத்து சமய சின்னத்தையும் அணிவித்தார்கள். ஆனால், அதனை ஒரு நொடிக்குள் அழித்து அவமானப்படுத்திவிட்டார்.

இதைப்போன்றே அனைத்து மக்களும் புனிதமாகக் கொண்டாடும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம், என்னைப் பொறுத்தவரை ஒரு கோயிலாகும். லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடி அவர்களின் நேர்த்தி கடனை செய்வது வழக்கம். பல கட்சி தலைவர்களும் அங்கு வந்து செல்கின்றனர். அங்கு எந்த விதமான பாகுபாடும் பார்க்கமாட்டார்கள். 

stalin must apologize...pon radhakrishnan demands

இந்நிலையில் அங்கு சென்ற ஸ்டாலின் அவருக்கு வழங்கப்பட்ட திருநீரை எடுத்து தரையில் கொட்டிவிட்டு வரக்கூடிய அளவில் இருக்கிறார். அவர் மிகவும் கீழ்தரமான செயலை செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்த ஒன்று. இதற்கு ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios