தமிழ்நாட்டில் சரியான ஆளுமை மிக்க தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது. நான் அரசியல் கட்சி தொடங்கினாலும் தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர். கூட கட்சி துவக்கி,முதல்வராகும் வரை தொடர்ந்து நடித்தார்.
- ரஜினிகாந்த்.
* தமிழ்நாட்டில் சரியான ஆளுமை மிக்க தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது. நான் அரசியல் கட்சி தொடங்கினாலும் தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர். கூட கட்சி துவக்கி,முதல்வராகும் வரை தொடர்ந்து நடித்தார்.
- ரஜினிகாந்த்.
* எங்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வர். நானும், ரஜினியும் தனியாக என்ன பேசிக்கொள்கிறோம் என கேட்டால் வியந்து போவர். நாங்களும் ரசிகர்களை அப்படியே சண்டையிட விட்டு வைத்துள்ளோம். இரண்டு கோல் போஸ்ட் இருந்தால்தானே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
- கமல்ஹாசன்.
* ’நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து சி.பி.ஐ. வாயிலாக விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். அதன் பிறகும் மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.
- கே.எஸ்.அழகிரி.
* தி.மு.க. கட்சி பத்திரிக்கையான ‘முரசொலி’ அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. எனவே அந்த அலுவலகத்தை பூட்டி, சீல் வைக்க வேண்டும்.
- பொன்.ராதாகிருஷ்ணன்.
* தமிழர்களின் ஒப்பற்ற மகான் திருவள்ளுவர். அவரை புகழ்ந்து பேசினால், தமிழக மக்கள் உள்ளங்களில் இடம் பெற்று விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதனால்தான் வள்ளுவருக்கு திருநீறு பூசி, காவி உடை அணிவித்துள்ளது.
- அம்மாசி (அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர்)
* லோக்சபா தேர்தல் முடிந்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதி அவ்வளவுதான்! என்றனர். ஆனால் கம்யூனிஸ்ட்கள் இல்லாமல் இந்தியா இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்காக, களத்தில் இறங்கி போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான்.
- பாலகிருஷ்ணன்
* பா.ஜ.க.வில் பல சினிமா பிரபலங்கள் உள்ளனர். ஆனால் ஊடகங்கள் பா.ஜ.க.வையு, ரஜினியையும் முடிச்சு போடுவதில் ஆர்வமாக உள்ளன. ரஜினிக்கு என இந்த மாநிலத்தில் தனி செல்வாக்கு உள்ளது. அவரை நாங்கள் வரவேற்கிறோம். அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களையும் பா.ஜ.க.வுக்கு அழைக்கிறோம்.
- வானதி சீனிவாசன்.
* மோடி இரண்டாவது முறையாக பிரதமரானதில் இருந்து ஜனநாயகம், சோஷியலிசத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியும் உருவாகியுள்ளது. வேலையின்மை, விலைவாசி உய்ர்வு ஏற்பட்டுள்ளது. ஆட்சியிலிருந்து அவரை அகற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- தா.பாண்டியன்.
* தனக்கு காவிச்சாயம் பூச முயற்சிக்கின்றனர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாததால் வெற்றிடம் நிலவுகிறது! என அவர் சொல்லியுள்ளார். பல படங்களில் தொடர்ந்து நடிப்பதால் தமிழக அரசியல் களத்தை அவர் சரியாக பார்க்க தவறிவிட்டார். வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும்! என்பது விஞ்ஞானம். தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பி வெகுநாட்கள் ஆகிவிட்டன.
- துரைமுருகன்
* மிசாவில் கைதானதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமையாக பேசிக்கொள்கிறார். ஆனால் அக்கட்சியின் பொன்முடி சந்தேகம் தெரிவிக்கிறார். மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அதைத்தான் நான் சொன்னேன். அதற்காக என் மீது தாக்குதலை தொடுக்கின்றனர் தி.மு.க.வினர்.
- மாஃபா. பாண்டியராஜன்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 11, 2019, 6:56 PM IST