திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டு பிள்ளை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். 

நாகையில் 2019-2020 கல்வி ஆண்டிற்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நாகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை திமுக வாபஸ் பெற்றது குறித்து ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுப் பிள்ளை; எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என அறியாதவர்” என கூறினார்.

இதேபோல் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'திருவிழாவில் திசைமாறிய பிள்ளைகள் திரும்பி வர வெட்கப்பட்டு திமுக பக்கம் செல்கின்றனர்' அவர் தெரிவித்தார்.