Asianet News TamilAsianet News Tamil

2 கோடி மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்க ஸ்டாலினுக்கு தில் இருக்கா. திமுகவை டார் ஆக்கிய ஜெயக்குமார்

பல்வேறு எதிர்ப்பு, யுக்திகளை கையாண்டு பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா தொற்று, மழை வெள்ள நிவாரணம் போன்ற பணிகளில் அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். 

Stalin have guts to announce Rs.1000 will be given to 2 crore women.? Jayakumar Asking.
Author
Chennai, First Published Feb 14, 2022, 12:53 PM IST

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் 2 கோடி மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூற தயாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் கூறியிருந்த நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

பல்வேறு எதிர்ப்பு, யுக்திகளை கையாண்டு பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா தொற்று, மழை வெள்ள நிவாரணம் போன்ற பணிகளில் அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவனுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி, நகை கடன் ரத்து என கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றன.

Stalin have guts to announce Rs.1000 will be given to 2 crore women.? Jayakumar Asking.

இதையே  நடந்துவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார வியூகமாக அதிமுக-பாஜக கையாண்டு வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் மக்கள் முன் செல்ல ஸ்டாலின் அஞ்சுகிறார், பிரச்சார களத்திற்கு நேரடியாக சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அவர் காணொலிக் காட்சியின் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில்தான் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டான் மகளிருக்கு மாதம் ஆயிரம் கொடுக்கப்பட்டும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்தார். இந்நிலையில் சென்னை பட்டாளம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சியை காண முடிகிறது என்றும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அலை தான் தமிழகத்தில் வீசுவதாகவும் கூறினார்.

மேலும், திமுக அரசில் மக்கள் படும் வேதனையை மக்கள் உணர்ந்து தோல்வியை தேர்தலில் பரிசளிக்க தயாராக உள்ளதாகவும், குறுக்கு வழியில் வெற்றி பெறலாம் என திமுக சூழ்ச்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அதே ஏமாற்று வார்த்தைகள், நம்பிக்கை துரோகம் செய்யவே மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக கூறிய அவர், திமுக தோல்வியை தழுவும் எனும் காவல்துறை அறிக்கை முதல்வரிடம் சென்றுள்ளது என்றும், அதை மறைக்கவே நாடகமாடி வருவதாகவும்,2024ல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன், 2 லட்சம் நபர்களுக்கு கொடுத்துவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என கூறலாம் என்றும், நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் 2 கோடி மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் கூற தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Stalin have guts to announce Rs.1000 will be given to 2 crore women.? Jayakumar Asking.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை என விமர்சித்த அவர், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவே வக்கில்லை என்றும், தேர்தல் விதிமுறைகள் திமுகவிற்கு இல்லை, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் எனவும் விமர்சித்தார். மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நடத்தும் அத்துமீறல்களை ஆளுநருக்கு தெரிவித்துள்ளதாகவும், திமுக அரசிற்கு அடிப்பணிந்தால் அரசு அதிகாரிகள் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மக்களை அறிவில்லாதவர்கள் என நினைப்பவர்கள் தான் திமுக என கூறிய அவர், மக்களை விட புத்திசாலிகள் இருக்க முடியாது என்றும், சிறப்பு விமானத்தில் சென்றுவிட்டு, தேநீர் கடையில் தேநீர் அருந்தினால் அது எளிமையாகிவிடுமா? எனவும் கேள்வி எழுப்பிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios