தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேலூர் தொகுதி தவிர மற்ற 39 தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கு வாழ்வா ? சாவா – என்ற நிலைதான் உள்ளது.

எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவும் , ஆளும் அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று திமுக மற்றும் அமமுக கட்சிகளும் பெரு முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்துவிட்டு அறிவாலயம் வந்து தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தெலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தேர்தல் நிலவரம் குறித்து பேசியதில் அந்தந்த தொகுதிகளில் கள நிலவரங்கள் திமுக வுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும்  சீனியர் மாவட்டச் செயலாளர்களுடன் பேசி தேர்தல் நிலவரம் என்னவென்று விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். அவரிடம் பேசிய மாசெக்கள், ‘பல இடங்கள்ல நாம காசு கொடுக்கல,. ஆனாலும் ரொம்ப நல்லா இருக்கு என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து . 96 ல ஜெயலலிதாவுக்கு எதிரா இருந்த எழுச்சி மாதிரி இப்பவும் அதிமுகவுக்கு எதிரா இருக்கு...’ என்ற ரீதியிலேயே கூறியிருக்கிறார்கள். 

இதையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தல் முடிஞ்ச அன்னிக்கே நாம ஆட்சி அமைக்க முடியாது சொன்ன மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய சீனியர் நிர்வாகியிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

அவர் நம்ம கூட்டணியில காசு கொடுக்காதவனும் ஜெயிச்சுடுவான். காசு கொடுத்தவனும் ஜெயிச்சுடுவான். காசு கொடுத்தவன் தான் பாவம்  என்று சொல்லிவிட்டு இடைத்தேர்தலிலும் நமக்கு சாதமாகவே இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். இது ஸ்டாலினுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தியிருகிறது.

இந்நிலையில் ஸ்டாலின் அறிவாலயத்தில் இருந்தபோதே ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் வேறு வேறு நம்பர்களில் இருந்து ஸ்டாலினிடம் பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெம்பைக் கொடுத்திருக்கிறது