Asianet News TamilAsianet News Tamil

அரக்கர் கையில் அறநிலையத்துறை.. கோயில்களை இடிப்பதை வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் அரசு.. இந்துகளை அழைக்கும் ராஜா

தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் சர்ச்சுகளும் மசூதிகளும் அனுமதி வாங்காமல் அரசு இடத்தில் கட்டப்பட்டாலும் இந்த Dravidian Stock ஹிந்து விரோத ஸ்டாலினின் ஆட்சி அதை தட்டிக்கேட்பதில்லை. ஆனால் தொடர்ந்து கோயில்களை இடித்து வருகிறது. ஹிந்துக்கள் நாம் பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமென்றால் வீதிக்கு வந்து இந்த ஹிந்து விரோத அரசுக்கு எதிராக போராட வேண்டுமென்பதை ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி தினத்தில் நாம் புரிந்துகொண்டு செயலாற்றுவோம் என எச்.ராஜா கூறியுள்ளார்.

Stalin government making fun of demolishing temples... H. Raja
Author
Tamil Nadu, First Published Feb 9, 2022, 11:55 AM IST

 ஹிந்துக்கள் நாம் பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமென்றால் வீதிக்கு வந்து இந்த ஹிந்து விரோத அரசுக்கு எதிராக போராட வேண்டுமென்பதை ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி தினத்தில் நாம் புரிந்துகொண்டு செயலாற்றுவோம் என எச்.ராஜா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தேசிய தலைவரும், மூத்த பாஜக தலைவருமான எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி இரண்டும் ஒன்றாக வருகிறது. ரத சப்தமி அன்று ஹிந்துக்கள் தலையிலே எருக்கை இல்லை வைத்து குளித்தால் பாவம் தீரும் என்று ஐதீகம். ஆனால் அதன் பின்னணி என்ன குருஷேத்திர யுத்தத்தில் பீஷ்மர் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டு கீழே விழுகிறார். ஆனால் அம்பு படிக்கையிலே படுத்திருக்கும் அவருக்கு உயிர் பிரியவில்லை. தினம்தோறும் இரவிலே யார் மாண்டு போயிருக்கிறார் யார் அடிப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் கண்ணபிரான் யுத்த பூமியை சுற்றிவருவார். அப்பொழுது பீஷ்மர் கண்ணனை பார்த்து வாசுதேவ கண்ணா எனக்கு ப்ராணன் போகவில்லையே இந்த அவஸ்தை எனக்கு எதற்காக கேட்கிறார். 

Stalin government making fun of demolishing temples... H. Raja

அப்பொழுது கண்ணன் சொல்கிறான் பாவம் செய்தால் ப்ராயசித்தம் செய்யாமல் எப்படி ப்ராணன் போகும் என்று கேட்கிறார் பீஷ்மருக்கு அதிர்ச்சி நானா? பாவம் செய்தேனா? என்று கேட்கிறார். அப்பொழுது கண்ணன் சொல்கிறான் ஒரு பாவசெயலை செய்தால் மட்டும் பாவம் அன்று ஒரு பாவச்செயல் நடக்கும்போது பார்த்துகொண்டிருப்பதும் பாவம்தான். ராஜசபையிலே திரௌபதி எப்படி அவமானப்படுத்தப்பாட்டாள் அதை நீர் தடுத்தீரா? இந்த மாதிரியாக துரியோதணாதிகளுடைய பாவச்செயல்களையெல்லாம் பார்த்துகொண்டு சும்மா இருந்த காரணத்தால் அந்த பாவம் உங்களுக்கும் உண்டு. அப்பொழுது கண்ணனிடம் பீஷ்மர் கேட்கிறார் நான் என்ன செய்தால் என் ப்ராணன் போகும். 

அப்பொழுது கண்ணன் சொல்கிறான் எருக்கை இலைக்கு ஒரு குணமுண்டு சூரிய வெப்பத்தை வேகமாக ஈர்த்து மிகப்பெரிய வலியை உண்டாக்கும். ஆகவே உடலின் மென்மையான பகுதி கண், காது, வாய்,மூக்கு ஆகிய பகுதிகளிலே எருக்கை இலையை வைத்துக்கொண்டால் சூரிய வெப்பத்தினால் அது ஒரு பெரிய வலியை கொடுக்கும். அது உங்களுக்கு ப்ராயச்சித்தமாக அமையும் என்று சொல்லுகிறார். ஆகவே இன்றைய தினம்தான் பீஷ்மர் கண், காது, வாய்,மூக்கு போன்ற மென்மையான பகுதிகளிலே எருக்கை இலையை வைத்து அதன் வலியின் காரணமாக அவருக்கு ப்ராயச்சித்தம் கிடைத்து  அவர் அஷ்டமியிலே முக்தி அடைகிறார் அதுதான் பீஷ்மாஷ்டமி. இன்றையதினம் இரண்டும் வருகிறது. 

Stalin government making fun of demolishing temples... H. Raja

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமென்ன, அறநிலையத்துறை எனும் அரக்கர் கூட்டம் ஹிந்துக்கள் பராமரித்துக்கொண்டிருக்கின்ற கோயில்களை கையகப்படுத்தி அழித்திருக்கிறது. 7-6-2021 ல் சென்னை உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பில் பக்கம் 154 ல் அரசே அதனுடைய பிரமாணபத்திரத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது. 6414 கோயில்கள் பழுதடைந்துள்ளன. 530 கோவில்கள் பாதியளவு அழிந்து போயிருக்கிறது. மேலும் 716 கோயில்கள் முழுமையாக அழிந்துவிட்டன. 

ஆகவே இந்த 7660 கோயில்கள் என்பதே குறைந்த மதிப்பீடு இது நிச்சயமாக 10,000 கோயில்களுக்கு மேல் இதுவரை அழிந்து போயிருக்கும். ஆகவே ஹிந்துக்களின் அவர்கள் கட்டி அவர்கள் பராமரித்த ஏனென்றால் அறநிலையத்துறை எனும் அரக்கர் கூட்டம் ஒரு கோயில் கூட கட்டவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஹிந்து சமுதாயம் கட்டி பராமரித்த கோயில்களை அடாவடியாக எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் அழித்திருக்கிறது இந்த அறநிலையத்துறை எனும் அரக்கர் கூட்டம். 

Stalin government making fun of demolishing temples... H. Raja

இது அவர்களுக்கு மட்டும் பாவமல்ல இதை பொறுத்துக்கொண்டு இதற்கு எதிராக போராடாமல் இருக்கும் ஒவ்வொரு ஹிந்துவும் பாவம் செய்தவர் என்பதைத்தான் கண்ணன் பீஷ்மருக்கு சொன்ன அறிவுரை நமக்கு புரியச்செய்கிறது. எனவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் சர்ச்சுகளும் மசூதிகளும் அனுமதி வாங்காமல் அரசு இடத்தில் கட்டப்பட்டாலும் இந்த Dravidian Stock ஹிந்து விரோத ஸ்டாலினின் ஆட்சி அதை தட்டிக்கேட்பதில்லை. ஆனால் தொடர்ந்து கோயில்களை இடித்து வருகிறது. ஹிந்துக்கள் நாம் பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமென்றால் வீதிக்கு வந்து இந்த ஹிந்து விரோத அரசுக்கு எதிராக போராட வேண்டுமென்பதை ரதசப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி தினத்தில் நாம் புரிந்துகொண்டு செயலாற்றுவோம் என எச்.ராஜா கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios