காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள  கலைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலைஞருக்கு ஏற்பட்டு உள்ள சிறுநீரக தொற்று நோய் மற்றும் தொடர்ந்து இருந்த காய்ச்சல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 8 மருத்துவர்கள் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்து  வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தொண்டர்கள் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்று காலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனை சென்று  கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார்.

 உடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர் விஜய பாஸ்கர், செங்கோட்டையன் உடன் இருந்தனர்.திமுக செயல்  தலைவர் ஸ்டாலின் கலைஞரின் உடல் நலம் குறித்து முதல்வரிடம் விளக்கம் அளித்தார்.