மண்வெட்டி பிடித்த கை இது. டிராக்டர் ஓட்ட தெரியும். எந்த பருவத்தில் எந்த விதையிட வேண்டும் என்பதும் தெரியும். நாம் விவசாய குடும்பத்தினர் என்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். 

இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்:- மண்வெட்டி பிடித்த கை இது. டிராக்டர் ஓட்ட தெரியும். எந்த பருவத்தில் எந்த விதையிட வேண்டும் என்பதும் தெரியும். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போல் எனக்கு நடிக்க தெரியாது. நாம் விவசாய குடும்பத்தினர் என்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். 

விவசாயிகள் கஷ்டம் நீங்கி ஏற்றம் பெறுவதற்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு. விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுகதான். இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான்.

விவசாயம் செழிக்க விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளை கொச்சைப்படுத்தும் ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.