விசைத்தறி, ஜவுளி தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசைத்தறி, கைத்தறி, ஜவுளி தொழில்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து சிறு - குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும்.

ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு நேர்மையாக தொழில் புரிபவர்கள், ஜி.எஸ்.டி.யால் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுவது வியப்பளிப்பதாக உள்ளது.

கோவை, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, ஜவுளி தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

ஊழலில் இருந்து தப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.