தினம் ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் திரித்து கருத்து கூறி வருவதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு ஏஜென்சிகளை அனுப்பி மாநில அரசின் நிர்வாகத்தை நிலை குலைய செய்வதாகவும், ராம மோகன்ராவுக்கு மீண்டும் பதவி வழங்கியது குறித்து பா.ஜ.க கேள்வி எழுப்பாதது ஏன் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

தினம் ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் திரித்து கருத்து கூறுகிறார்.

ஒரு குழந்தை கூட நம்பாது என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தவே ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

பா.ஜ.கவுக்கு எதிராக கருத்து கூற வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவராக கருத்துகளை கூறி வருகிறார்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.