வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.  

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். வேலூரில் நேற்றிரவு பேரறிஞர் அண்ணா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஓய்வூதியம் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவால் எடப்பாடியார் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாரா எனக் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றி செய்தி வரவில்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே இருந்தது. இதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் வேண்டுமென தற்போது துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் கேட்டிருந்தார். இதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏன் இதுவரை ஒரு முறை கூட ஆஜராகவில்லை என்றார்.

துணை முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் அமைதியாகிவிட்டார். தற்போது ,அமைச்சர்கள் ஒருவர்கூட ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கேட்கவில்லை.கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான பணியில் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. கொரானா நோய்த்தொற்று காலத்தில், மக்கள் வேலைவாய்ப்பு இல்லாத அந்த சமயத்தில், மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் மருந்து மாத்திரைகள் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை திமுக வழங்கியது. இது போன்ற ஒரு பணியினை இந்தியாவில் வேறு எந்த கட்சியும் செய்யவில்லை என முக ஸ்டாலின் கூறினார். கொரோனா காலத்தில் செய்த சிறிய உதவிகளைக்கூட திமுக தலைவர் ஸ்டாலின் வீதிக்கு வீதி சொல்லிக்காட்டி நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறார் என அங்கு திரண்டிருந்த மக்கள் சொல்வதை கேட்க முடிந்தது.