குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் அதில் வாக்களிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்எல்ஏக்களுடன்  வாக்குப்பதிவு நடைபெறும் மையமான சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளார்.

நாட்டின் 14-வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபையிலும் இன்று நடைபெறுகிறது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

இதில் பா.ஜனதா தலைமையிலன தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம் நாத் கோவிந்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமாரை திமுக ஆதரிக்கிறது. இதே போன்று பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை அதிமுகவின் இரு அணிகளும் ஆதரிக்கின்றன.

இன்றும் சற்று நேரத்தில்  வாக்குப் பதிவு தொடங்கவுள்ள நிலையில் மீரா குமாரை ஆதரிக்கும் திமுக செயல் தலைவர் வாக்களிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளார்.

அவருடன் திமுக எம்எல்ஏக்களும் தலைமைச் செயலகம் வந்துள்ளனர். இதனிடையே தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.