மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் சுவாமிநாதன். நேற்று மதுரை நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி வழக்கறிஞர்கள் இனி தினமும் ஒரு திருக்குறளை அதன் பொருளோடு மனப்பாடம் செய்து மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாள்தோறும் மதியம் 1.30 மணி அல்லது மாலை 4.45 மணியளவில் கூற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நீதிபதி சுவாமிநாதனை பாராட்டி இருக்கிறார்.

அந்த ட்விட்டில் ," மதுரை உயர்நீதிமன்றத்தில் தினமும் வழக்கறிஞர் ஒரு திருக்குறள் சொல்ல வேண்டும் என்று மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் அறிவித்திருப்பதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்! முன்னோடியான இந்த நற்செயல் பரவிட வேண்டும் என விரும்புகிறேன்!” என்று கூறியுள்ளார்.