சென்னை வந்த ராகுல் காந்தி இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு, பின்னர் விமானம் மூலம் நாகர்கோவில் சென்று பிரச்சார உரையை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "துணிச்சலோடு முதன் முதலாக நான் சொன்னேன் ராகுல்தான் பிரதமர் என்று...ராகுல் காந்தியை நான் பிரதமராக முன்மொழிகிறேன் என நாகர்கோவில் பிரச்சார கூட்டத்தில் பேசினார். பின்னர் பாஜக ஆட்சியை விமர்சிக்கும் போது கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை, நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும்.

40 க்கு 40 வெற்றி பெற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன் என ஸ்டாலின் பேச, இதனை தொடர்ந்து, ராகுல் பேசும் போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி என்றும், ஏழை மக்களுக்கான நல்லாட்சி வழங்க வேண்டும், ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என பேசினார். ஆக மொத்தத்தில், இருவருமே ஒருவருக்கொருவர்  விட்டுக்கொடுக்காமல் புகழாரம் சூடினர். 

வானத்தை போல படத்தில் வரும் ஒரு காட்சி போல, திமுக தலைவர் ஸ்டாலின் ராகுலை புகழ்ந்தும், ராகுல் ஸ்டாலினை புகழ்வதுமாக இன்றைய முதற்கட்ட தேர்தல் பிரச்சார உரை நடந்தது.