அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கலந்துகொள்ளாதது பற்றி பேச்சு வந்தது. இதில் அரசியல் செய்வதாக சொல்கிறார்களே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அனைத்து கட்சி கூட்டம் குறித்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பபட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர்கள் ஏன் வரவில்லை எனபது குறித்து அவர்களை சந்தித்து விளக்கம் கேட்டு என்னிடம் சொல்லுங்கள் என்றார். பின்னர் தேமுதிக பற்றி பேசிய அவர் முன்பு தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது இதே போன்று அனைத்து கட்சி கூட்டத்தை விஜயகாந்த் கூட்டினார்.அப்போது அவர் எதிர்க்கட்சித்தலைவர்.அவருக்கு மதிப்பு கொடுத்து திமுக சார்பில் திருச்சி சிவா எம்பிஐ தலைவர் அனுப்பினார்.

இன்று நான் எதிர்க்கட்சித்தலைவர் நான் அனைத்து கட்சி கூட்டம் கூட்டினேன் ஆனால் தேமுதிக வரவில்லை. என்றார். கர்நாடகாவில் இருப்பதுபோல் எதிர்க்கட்சிகள் இங்கு ஒற்றுமை இல்லை என்கிறார்களே என்று கேட்ட போது திடீரென ஸ்டாலின் முதலில் உங்கள் ஊடகங்கள் ஒற்றுமையாக இருங்கள் நீங்கள்தான் இந்த செய்திகளை பிரித்து ஆராய்ந்து, அலசி பல்வேறு விதமாக , விவாதம் செய்து,செய்தியாக்குகிறீர்கள். பிரித்து பார்க்கிறீர்கள் உங்களுக்குள் முதலில் ஒற்றுமை வேண்டும் இது எனது தாழ்மையான கருத்து. 

என்று தெரிவித்தார். அரசியல் கட்சிகள் ஒற்றுமை இல்லையே என்பது பற்றி கேட்டால் இவர் நம்மை பற்றி பேசுகிறாரே ஊடகங்களும் இவர்களிடம் தானே உள்ளது என்று செய்தியாளர்கள் குழம்பியப்படி சென்றனர்.