திமுக ஆதரவு எம்.பி. பாரிவேந்தருக்கு சிக்கல்...! சிபிசிஐடி தோண்டி துருவுவதால் பிரச்சனை..!!

மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் பல முறைகேடு நடைபெற்ற புகாரின்பேரில் எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் தலைவர் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர். இவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SRM University chancellor Pachamuthu Problem

மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் பல முறைகேடு நடைபெற்ற புகாரின்பேரில் எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் தலைவர் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர். இவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு கல்லூரி தொடர்பான எந்த ஒரு சிக்கலும் பிரச்சனை இல்லாமல் வந்த பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் தற்போது மாணவ மாணவியர் தற்கொலை என்ற ரூபத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாகவே சென்னை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். கல்வி குழும நிறுவனங்களில் உள்ள ஹாஸ்டல்கள் மற்றும் கல்லூரி கட்டிடங்களில் இருந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  SRM University chancellor Pachamuthu Problem

முதலில் மாணவர்களின் சொந்த பிரச்சனை என்று கருதி வந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை செய்துகொண்டு இறந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் பலர் காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரே கல்லூரி நிர்வாகத்தில் எப்படி அடுத்தடுத்து மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக இறந்த மாணவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். SRM University chancellor Pachamuthu Problem

இந்த நிலையில் தான் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி. மல்லிகா தலைமையில் எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகள் மற்றும் ஹாஸ்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறை தலைவர் அதாவது dgp அலுவலகத்திலிருந்து பத்திரிக்கை செய்தி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி அனுப்பிரியா 21 வயதான இவர் கடந்த மே மாதம் 26-ம் தேதி 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். SRM University chancellor Pachamuthu Problem

அதேபோன்று 27-ம் தேதி அன்று ஜார்கண்டை சேர்ந்த அணித் சவுத்ரி என்ற மாணவரும் கல்லூரியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15-ம் தேதி ஜூலை மாதம் கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷன் என்ற மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தமிழக சிபிசிஐடி போலீசார் களத்தில் குதித்துள்ளனர். SRM University chancellor Pachamuthu Problem

இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் தலைவராக உள்ள பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ஏற்கனவே மாணவர் சேர்க்கை தொடர்பான பிரச்சனையில் சிக்கி இன்னும் முழுமையாக அதில் இருந்து விடுபடாத நிலையில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி சோதனை அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios