Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீபிரியாவின் நம்பிக்கையை பாராட்டி, கம்பெனி சார்பாக....

*    தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, ஆனால் பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையோ ஜீரோ: ஸ்டாலின். 
 

sripriya hope is encourage for makkal neethi maiyam
Author
Chennai, First Published Apr 11, 2019, 4:45 PM IST

*    தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, ஆனால் பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையோ ஜீரோ: ஸ்டாலின். 
(தல,  நல்ல ரைமிங்காதான் பேசுறீங்க, ஆனா தேர்தல் டைமிங்ல வெற்றியை மிஸ் பண்ணிடுறீங்க. ஆனா ஒண்ணு தல, எம்பூட்டு அடிவாங்கினாலும் மறுபடியும் மொதல்ல இருந்து எப்படி கூலா ஆரம்பிக்கலாமுன்னு உங்ககிட்ட எக்ஸ்ட்ரா டியூஸன் படிக்கணும் வருங்கல பாலிடிக்ஸ் பயபுள்ளைக.)

*    களப் பணியாளராக இந்த முறை நான் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அடுத்த முறை வேட்பாளராக களமிறங்கையில் சிறப்பாக செய்ல்பட எனக்கு வசதியாக இருக்கும். எனக்கு சீட் தர யோசிக்கும் முன்பே, ‘நான் போட்டியிடவில்லை’ என தலைவரிடம் சொல்லிவிட்டேன்: ஸ்ரீப்ரியா. 
(இந்த தேர்தலுக்கு பிறகு மையம் இருக்குமா? மாயமாகிடுமான்னு கமலுக்கே தெளிவா தெரியலை. ஆனாலும், அதையும் மீறி நீங்க ’அடுத்த தேர்தலில் நான் வேட்பாளர்’ன்னு சொல்றீங்க பாருங்க. அந்த தன்னம்பிக்கையை பாராட்டி, கம்பெனி மனசார பாராட்டுது.)

*    சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது எங்களுக்கு பின்னடைவு கிடையாது. அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும். யாருக்கும் பாதிப்பு இல்லாத அளவுக்கு முதல்வர் முடிவெடுப்பார்: ராஜேந்திர பாலாஜி
(ஆனா ஒண்ணுண்ணே, மக்களே உங்க கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க நினைச்சாலும், உங்க வாயி அவங்க கைல, கால்ல விழுந்து கதறிக் கதறி அழுதாச்சும் ஓட்டே போட விடாதுங்கிறது தெளிவா புரியுது. உங்ககிட்ட இன்னும் பெருசா எதிர்பார்க்கிறாரு ஸ்டாலின்.)

*    வன்னியர்களுக்காகவே வாழ்வதாக சொல்லும் ராமதாஸ், வன்னிய மக்களுக்கு என்ன செய்தார்? என்பதை என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?: வேல்முருகன். 
(ஓகே, ஒரே மேடையில் என்ன, ரெண்டு மேடையில கூட விவாதிக்க ரெடி. ஆனால், அதுக்கு முன்னாடி தைலாபுரம் தோட்டத்துக்கு நீங்க விருந்துக்கு வரணும்! அந்த டீலிங்குக்கு நீங்க ஓ.கேன்னா, அவுகளும் ஓ.கே. எப்டி வசதி?)

*    எட்டு வழிச்சாலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்யக்கூடாது. விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் என் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும்: அன்புமணி. 
(இந்தா வந்துட்டார்ல எங்க சிங்கக்குட்டி. தேர்தல் வரைக்கும் அவ்வளவு நிம்மதியா எங்க டாக்டர்களை வெச்சுக்கிட்டு நீங்க கூட்டணி வண்டியை ஓட்டீருவீகளாக்கும்? இந்தா போட்டாருல்ல கட்டய. இது சாம்பிள்தான், இனிதான் இருக்குடி மெயின் பிக்சரு.)
 

Follow Us:
Download App:
  • android
  • ios