Breaking என்றால் உடைப்பது என்று அர்த்தம். கடந்த சில வருடங்களாக ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் மொத்த பார்வையும் தமிழகத்தின் மீதே விழிந்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டையும் அது ‘பிரேக்கிங்’ வைபரேஷனிலேயே வைத்திருக்கிறது. சுவாதி மரணம் முதல் ஜெயலலிதா மர்மம் நிறைந்த மரணம் வரை அடுத்தடுத்து மக்களை யோசிக்கவிடாமல் வைத்திருந்தது.

தமிழ் தொலைகாட்சிகளில் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளே எப்போ என்ன நடக்கும்? என நியூஸ் சேனலை மாற்றாமல் பார்த்துக் கொண்டே இருகின்றனர்.

கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தொடங்கியது இந்த பிரேக்கிங் எடப்பாடி மற்றும் பன்னீர் தொடர்பான விவகாரமென்றால் ‘பிக் பிரேக்கிங்’, தினகரன் விஷயமென்றால் ‘ஃப்ர்ஸ்ட் பிரேக்கிங்’, ரஜினி சிஸ்டம் சரியில்லை என சொன்னால் ஒரு பிரேக்கிங். கமல் கட்சியை தொடங்கியது பிக்கஸ்ட் பிரேக்கிங் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களின் விவகாரமென்றால் ‘பிரேக்கிங்’ என்று நாள்தோறும் உடைபட்டுக்கொண்டே இருக்கின்றன.

உடைபடுவது ரகசியச் செய்திகள் மட்டுமில்லை; தமிழனின் தன்மானமும், அவனது வளர்ச்சிப்பாதையும்தான்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வரும் 2019ஆம் ஆண்டுடன் அரை நூற்றாண்டுகால திரையுலக வாழ்வை நிறைவு செய்யவிருந்த இந்திய திரையுலக தேவதையாக வலம் வந்த கனவுக் கன்னி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தொடர்ந்து 1986 வரை தமிழ் படங்களில் நடித்தபடி இருந்தவர்,  எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய் என மூன்று தலைமுறை நாயகர்களுடன்  கிட்டத்தட்ட கடந்த ஐம்பது ஆண்டு காலமாய் இந்தியாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்த ஒரு நடிகை உண்டென்றால் அவர் ஒரே ஒருவர்தான்.

தமிழில் கனவுக்கன்னியாக இருந்த இவர் மற்ற மொழிகளில் ராஜேஷ்கண்ணா, ஜித்தேந்திரா, அமிதாப் பச்சன், தர்மேந்திரா& சன்னி தியோல் (தந்தையும், மகனும்) நாகேந்திரராவ்&நாகார்ஜுனா (தந்தையும் மகனும்)
சிரஞ்சீவி,மிதுன் சக்கரவர்த்தி, சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், மிதுன் சக்கரவர்த்தி, அனில் கபூர்,சஞ்சய்தத் என அவர் இணைந்து நடிக்காத நட்சத்திரங்களே இல்லை எனும் அளவுக்கு கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தார்.

குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவரது உடல் நேற்று பதப்படுத்தப்படவில்லை. இதனால், மும்பைக்கு உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் ஒப்படைத்தனர்.

எம்பால்மிங் மூலம் பதப்படுத்தப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. தற்போது ரசிகர்களின் இறுதி அஞ்சலிக்காக ஸ்போர்ட்ஸ் கிளபில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு அனுமதி கொடுக்க கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றதாக சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்தே கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது.  இன்று காலை 7.50 மணிக்கு லண்டன் விமானத்தில் வந்து இறங்கி வந்த போது ஐந்து பேர் மாற்று உடையில் கார்த்திக் சிதம்பரம் அருகில் சென்றவுடன் “வு ஆர் யூ” என கேட்டவுடனே கையும் கழுத்தையும் பிடித்து தனி அறைக்கு கொண்டு சென்று 10.40 மணிக்கு டெல்லி விமானத்திற்க்கு சென்று விட்டனர் CBI குழு.

காஞ்சி ஜெயேந்திரர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் காஞ்சி மடத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காஞ்சி ஜெயேந்திரர் உயிரிழந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முலீடுக்கான முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது.

கடந்த 1994-ம் ஆண்டு முதல் இன்று காலை அவர் மரணிக்கும் வரை சர்ச்சைகளோடு வாழ்ந்த ஜெயேந்திரர் மரணம். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு உப கண்டத்தின் கனவுக் கன்னியாக கோலோச்சியது, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகால கலைத்துறை சாதனை செய்து மரணித்த ஸ்ரீதேவி மரணித்தது என பிரேக்கிங், பிக் பிரேக்கிங், ஃபர்ஸ்ட் பிரேக்கிங் என்று தமிழ் மக்கள் மட்டும் இவைகளுக்கு நடுவில் உடைபட்டு, உடைபட்டு ஓடிகொண்டிருந்த நிலையில் அடுத்தடுத்து சம்பவங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.