அரசு ஊதியம் கொடுத்தும் பெறமுடியாமல் தவிக்கும் IED சிறப்பு பயிற்றுநர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கைக் எடுக்க வேண்டும் என  தாமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1 முதல் +2 வகுப்பு வரை பயிலும் 2 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் 1998 ல் ரூபாய் 3500  தொகுப்பூதியத்தில்  பணிநியமனம் செய்யப்பட்டார்கள் 1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) பணிபுரிந்து வந்தனர்.. 2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு நிருவனங்களின் (NGO) மூலமாக பணிபுரிந்து வந்தனர்.  தற்போது 2018  முதல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் (Samagra Shiksha) பணிபுரிகின்றனர்.

NGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜுன் மாதம் தொண்டு நிருவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது.. MHRD வழிக்காட்டுதல் படி 2015 ஆண்டு ஜூன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர். தற்போது தொகுப்பூதியம் ரூ. 16 ஆயிரம் வழங்கப்படுகிறது.இக்காலத்தில் தான் நேரடியாக மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து சிறப்பு பயிற்றுநர்களின் வங்கி கணக்குக்கு வந்த ஊதியம் VEC/SMC க்கு வந்து அங்கிருந்து எங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பும் நடைமுறை பகுதிநேர ஆசிரியர்கள் போன்று சிறப்பு பயிற்றுநர்ளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழக அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி, பயிற்சி, சேவை மற்றும் வழிகாட்டல் செய்து பணியாற்றிவருகின்றார்கள். 

 இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது..சிறப்பு பயிற்றுநர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ஊதியம் வழங்கினால் மட்டுமே இதுபோன்ற அசாதாரணச்சூழலையும் சமாளிக்கமுடியும்.இன்றைய காலகட்டத்தில் உணவுக்கும் அடிப்படை செலவினத்துக்கும் கூட சம்பளம் பள்ளிகக்கணக்கில் அரசுவழங்கியும் ஊதியத்தினை பெறமுடியாமல் தவித்துவருகிறார்கள்  இம்மாத ஊதியம் கிடைத்திட வழிவகை செய்திடவும் எதிர்காலத்தில் வட்டாரவள மையம் மூலமாக நேரிடையாக சிறப்பு பயிற்றுநர்களின் வங்கிகணக்கில் வரவுவைக்க ஆவனசெய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகிறோம் . என வலியுறுத்தப்பட்டுள்ளது.