முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதல்வர் பழனிசாமி  வெளியிட்டார்.

எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசுசின் சார்பில் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.  

முன்னதாக, எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

அதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவாக அவரது பெயரில் நூற்றாண்டு நினைவு வளைவு திறந்து வைக்கப்பட்டது.