எஸ்.பி.வேலுமணியின் கடந்த வார செயல்பாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கோட்டை வட்டாரங்களில் பலமாக பேச்சு அடிபடுகிறது.

தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சித்துறை தன் வசம் வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணியுடையது. இந்த நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி கூறிய கருத்து செய்தியாளர்களைளே அதிர வைத்தது.

 

அதாவது தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை அதிமுக அரசுக்கு தலைவலியாக உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எஸ்.பி.வேலுமணி கலைஞர் ஆட்சியில் இருந்த போது அவர்களுக்கு மின்சாரம் பிரச்சனையாக இருந்தது. தற்போது எடப்பாடி அரசுக்கு தண்ணீர் பிரச்சனையாக உள்ளது என்று கூறினார். அதாவது எடப்பாடி அரசு தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என்று தன்னை அறியாமல் ஒப்புக் கொண்டார் எஸ்.பி.வேலுமணி.

 

இதே போல் கேரளாவில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலமாக அனுப்பி வைப்பதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தமிழக முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது முதலமைச்சர் அப்பலோ மருத்துவமனையில் இருந்தார். இதனால் இந்த விவகாரத்தை உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் கொண்டு சென்றது. 

இதன் பிறகு தமிழக உள்ளாட்சித்துறை தான் கேரளாவில் இருந்து தண்ணீர் அனுப்ப வேண்டாம் என்று தடலாடியாக முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எஸ்.பி வேலுமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்காமலேயே முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்சனையை பிரஸ் மீட் வைத்து சமாளிக்க வேண்டிய நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார். 

இந்த இரண்டும் எதேச்சையாக நடந்ததா அல்லது எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டே அரங்கேற்றினாரா என்று அதிமுக மற்றும் அல்ல கோட்டையிலும் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.