உள்ளாட்சித்துறை அமைச்சர்  வேலுமணி மீது சமீப காலமாக திமுக தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை  கூறி வருகிறார்.  ஸ்மார்ட் சிட்டி டெண்டரில்  முறைகேடு நடந்துள்ளதாக  வேலுமணி மீது பகிரங்கமாக  குற்றம் சாட்டியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி டெண்டர் தொடர்பாக மூத்த IAS அதிகாரி தலைமையில் குழு  அமைத்து லஞ்ச ஊழல் புகாரில் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் அவ்வப்போது வேலுமணி தொடர்ந்து கவுண்ட்டர் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,  மு.க ஸ்டாலின் திமுகவிற்கு மட்டுமே தலைவரே தவிர ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைவர் அல்ல என கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அவர் திமுக தலைவர் வேலையை மட்டும் பார்த்தால் போதும் எனவும் விமர்சித்துள்ளார். ஸ்டாலின்  வேலுமணி இடையே தொடங்கியுள்ள இந்த அறிக்கை மற்றும் வார்த்தைப்போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.