காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

 

இந்த முடிவு நாடாளுமன்ற மைய அரங்கத்தில் ராகுல்காந்தி தலைமையில் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. சோனியா கந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுக்கும் சோனியாகாந்தி தலைவராக இருப்பார். ஏற்கெனவே இரு அவைகளுக்கும் தலைவராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். 


படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல்காந்தி அந்தபதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.