ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நள்ளிரவு கைது செய்தது. சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், பிணை கோரி மனு அளித்தார். செப்டம்பர் 5ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

அதன்பிறகு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த முறையும் சிபிஐ அவரது பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு பிணை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என சிபிஐ தரப்பு தெரிவித்தது. இதனால் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்தனர். அவர்களுடன் சிதம்பரத்தின் மகள் கார்த்தி சிதம்பரமுன் உடனிருந்தார்.

அப்போது ப.சிதம்பரத்திற்காக காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று கார்த்தி சிதம்பரத்திடம் சோனியா காந்தி, கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.