குடியுரிமைச் சட்ட மசோதா  பலத்த எதிர்ப்புக் கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர்  ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வடமாநிலங்களிலும், டெல்லியிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் திமுக இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறது. குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்படவார்கள் என கூறி வருகிறது. 

இந்நிலையில் மதுரையில் இன்று நடைபெற்ற குடியிரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை  மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை. திமுகவிற்கு இந்துக்களை பிடிக்காது, காங்கிரஸ்காரர்களுக்கு சீக்கியர்களை பிடிக்காது. ஆனால் இவர்களுக்கு மத்திய அரசு, குடியுரிமை சட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

திருவள்ளுவர் மண்ணிலிருந்து கேட்கிறேன், திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது? வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் பணிகளை மத்திய அரசு செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன்” என்று  ஸ்மிருதி இரானி அதிரடியாக தெரிவித்தார்.