ஸ்மார்ட் சிட்டி 3-வது பட்டியலில் புதுச்சேரி : முதல்வர் நாராயணசாமி
மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததும், பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, பல சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி 3-வது பட்டியலில் புதுச்சேரி இடம்பெறும் என, புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .
இது குறித்து கருத்து தெரிவித்த, புதுவை முதல்வர் நாராயணசாமி ஸ்மார்ட் சிட்டி 3-வது பட்டியலில் புதுச்சேரி இடம்பெற அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்படும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கருத்தரங்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார் .
