இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 110 வது விதியின் கீழ், மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1, ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதத்தில், சென்னை அடையாறில் அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். 

சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.