சினிமாவை சமூக மாற்றத்துக்கான கருவியாக பார்த்தவர் என நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கே.வி.ஆனந்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சினிமாவை சமூக மாற்றத்துக்கான கருவியாக பார்த்தவர் என நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கே.வி.ஆனந்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பத்திரிகை புகைப்படக்கலைஞராக வாழ்வை தொடங்கி தன் கனவை கைவிடாமல் கடும் உழைப்பின் மூலம் முக்கியமான இயக்குனராக உருவெடுத்த K.V.ஆனந்த் சாரின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். எல்லோருடனும் எளிமையோடு பழகும் பண்பாளர். சினிமாவை சமூக மாற்றத்துக்கான கருவியாக பார்த்தவர்.
Scroll to load tweet…
ஆனந்த் சாரின் மரணம் கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல். சாரின் குடும்பத்தாருக்கும் - நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தன் படைப்புகளின் மூலம் ஆனந்த் சார் எப்போதும் நம்முடன் வாழ்வார்'' எனத் தெரிவித்துள்ளார்.