அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான தம்பிதுரை, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காரர். பெரும்பாலும் கரூர் தொகுதி எம்.பி.,யாகவே தான் இருந்தார். குறிப்பாக 2009ம் ஆண்டில் இருந்து, 2019 வரைக்கும் கரூர் எம்.பி.,யாக 10 ஆண்டுகளாக இருந்ததால் 2011- 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வில் இவரது பங்களிப்பு நிறைய இருந்தது. கடந்த 2019 தேர்தலில், கரூரில் தம்பிதுரை தோற்றுப் போனதில் இருந்து, கரூருக்கு வருவதையே குறைத்துக் கொண்டார்.

 

இதனால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கை ஓங்கி விட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் தேர்வில், தம்பிதுரை தலையீடு இருக்காது என அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் எம்படி இருந்த தம்பித் துரையை ஒரு தோல்வி எப்படியெல்லாம் தலைகீழாக்கி விட்டது என அவரது ஆதரவாளர்கள் விம்முகிறார்கள்.