Should unbiased investigation

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடுநிலையோடு நடைபெற வேண்டும் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். 

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை நடுநிலையோடு நடைபெற வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்துக்கு வரும் என நம்புவதாகவும் பொன்முடி கூறினார்.