நாசிக்கில் நடந்த சம்பவம் பயங்கரவாமானது. 22 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 


மகாராஷ்டிரா மாநில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் ஜாகிர் உசைன் நகராட்சி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், டேங்கரில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் தடை ஏற்பட்டது. இதனால், 22 நோயாளிகள் உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஊழியர்கள், மற்றவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி, தொடர்ந்து சிகிச்சை பெற உதவினர்.

ஆக்சிஜன் டாங்கரில் உள்ள வால்வில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ள மஹாராஷ்டிரா மாநில அரசு, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட இரங்கல் செய்தியில்,’’ 22 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் இது குறித்து, ‘’நாசிக்கில் நடந்த சம்பவம் பயங்கரவாமானது. 22 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகளுக்கு உடனடியாக உதவி செய்வதுடன், தேவைப்பட்டால், வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.