Shock government for government employees Frozen employees

வயதான பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்ய வகை செய்யும் சட்டமசோதா அசாம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்களின் உயிரைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோரை, தாங்கள் நல்ல நிலைக்கு வந்தவுடன் அவர்களைக் கண்டுகொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு தங்கள் கடமையைச் செய்துவிட்டதாக நினைப்பவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமாகிக் கொண்டேவருகிறது.

அப்படி இருக்கையில் வயதான பெற்றோரின் வாழ்க்கையை மனதில் அசாம் மாநில அரசு ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதன்படி, வயதான பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்பட உள்ளது.

இந்த சட்டத்திற்கு ஆதரவுகள் கிடைத்தபோதிலும் எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தை விமர்சித்துள்ளன.