டி.டி.வி.தினகரனின் சகோதரர் சுதாகரனுக்கு சிவாஜியின் பேத்தியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 

தினகரனின் மகள் ஜெயஹரினி- தஞ்சாவூர் காங். முன்னாள் எம்.பி. துளசி வாண்டையாரின் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமணம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு பெண் அழைப்பு நடைபெற்றது. இன்று காலை சசிகலா தலைமையில் திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தினரும் பங்கேற்றனர். தினகரன் வீட்டு திருமணத்தால் திருவண்ணாமலை நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கியது.

 இந்த திருமணத்தில் சசிகலா உள்பட பல அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் அவருடைய மனைவி, இளைய மகன் பிரபு மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். டிடிவி தினகரன், சிவாஜி குடும்பத்தினர்களை வரவேற்கும் காட்சியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

டி.டி.வி.தினகரனின் சகோதரர் சுதாகரனுக்கு சிவாஜியின் பேத்தியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.