Asianet News TamilAsianet News Tamil

பாதுகாப்பு கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே.. மாணவி கடிதம் மனசாட்சியை குத்திக் கிழிக்கிறது.. கலங்கும் அன்புமணி

கோவை, கரூர், சென்னை என பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.  இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது.  பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

sexual harassment school student committed suicide issue... anbumani
Author
Chennai, First Published Dec 19, 2021, 7:23 AM IST

கோவை, கரூர், சென்னை என பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.  இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அண்மைகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.   இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் இந்த சம்பவத்தை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கோவை மாணவி தற்கொலை, கரூர் மாணவி தற்கொலை என பள்ளிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளால் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். தொடர்ந்து பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

sexual harassment school student committed suicide issue... anbumani

அரசு பள்ளியில் மாணவிகளுக்குல் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானால் அது குறித்து தைரியமாக புகார் அளிக்க அவசர உதவி எண்ணையும் அறிவித்துள்ளது. இருந்த போதிலும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்வது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில், பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவி, #SchoolisNotSafety என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி வேதனையுன் தெரிவித்துள்ளார். 

sexual harassment school student committed suicide issue... anbumani

இதுதொடர்பாக பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னையை அடுத்த மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. அந்த மாணவி  எழுதி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ள கருத்துகள் சமூகத்தின் மனசாட்சியையும் குத்திக் கிழிக்கின்றன.

sexual harassment school student committed suicide issue... anbumani

கோவை, கரூர், சென்னை என பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.  இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது.  பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

 

 

தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும்  மாணவிகள் உட்பட எந்த பெண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடாது; தற்கொலைகள் கூடாது என்ற நிலையை உருவாக்க  தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என  அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios