பாலியல்  வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  எம்பிகளை அதிகம் கொண்ட கட்சியாக பாஜக என   தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான  ஏடிஆர் என்ற அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ்  என்ற நிறுவனம் பாலியல் வழக்குகளில் தொடர்புடைய எம்பி ,  எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது . 

அதற்கான அறிக்கையை சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது .  அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பாஜகவில் சேர்ந்தார் எம்பி மற்றும்  எம்எல்ஏக்கள்  அதிகம் சம்பந்தப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 66 பேருக்கு நாடாளுமன்றம்  மற்றும் சட்டமன்ற தேர்தல்களில்  போட்டியிட பாஜக அனுமதி அளித்துள்ளதும் அவர்களுக்கு சீட் வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதேபோன்று கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாலியல் வழக்கில் சம்பந்தமுடைய  572 பேர் போட்டியிட்டனர் .  ஆனால் அவர்களில் ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என அந்நிறுவனம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது .