Asianet News TamilAsianet News Tamil

நாளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இன்றோ அல்லது நாளையோ விடுதலை- வழக்கறிஞர்.

இச்சூழலில் தற்போது உச்சநீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தமிழக ஆளுநர் விடுதலை குறித்த முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

Seven people, including Nalini, are hoping to be released. Release today or tomorrow. Advocate says.
Author
Chennai, First Published Jan 30, 2021, 9:58 AM IST

இன்று (30.01.2021) அல்லது நாளை 7 பேரும் விடுதலை ஆவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. விடுதலைக்கு பின் முருகன், சாந்தன், ராபட் பயஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விரும்பிய நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படலாம் என அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் மற்றும் வேலூர் பெண்கள் தனி சிறையில் உள்ள நளினி ஆகியோரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது: முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். தற்போதைக்கு அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ல் ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 9 செப்டம்பர் 2018 அன்று தமிழக முதல்வர் பழனிசாமி ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மாணம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். 

Seven people, including Nalini, are hoping to be released. Release today or tomorrow. Advocate says.

இச்சூழலில் தற்போது உச்சநீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தமிழக ஆளுநர் விடுதலை குறித்த முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன் பேரில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கான உத்தரவு தமிழக அரசுக்கும், ஆளுனருக்கும் கிடைக்க ஓரிரு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆகவே இன்று அல்லது நாளை 7 பேரும் விடுதலை ஆவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. மேலும் ஆளுநர் தங்களை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்களும் இருக்கின்றனர். 

Seven people, including Nalini, are hoping to be released. Release today or tomorrow. Advocate says.

நளினியை நான் சந்தித்தேன் அவரும் அதே நம்பிக்கையுடன் உள்ளார் என்றார். தொடர்ந்து பேசிய அவர் விடுதலை செய்யப்படும் முன்பு ஒரு அரசாணை வெளியிடப்படும் அதன்படி 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள். இதில் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மேலும் ஜெயக்குமார் நிரந்தரமாக சென்னையில் வசிப்பதால் இவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது என்று எண்ணுகிறேன். முருகன், சாந்தனு, ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசாங்கம் திருச்சி முகாம் அல்லது வேறு ஏதேனும் பொதுவான முகாமில் தங்க உத்தரவிடலாம் அதன் பிறகு அவர்கள் விரும்பிய நாட்டிற்குச் செல்ல தமிழக அரசோ அல்லது இந்திய அரசோ அனுமதி அளிக்கலாம் என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios