Asianet News TamilAsianet News Tamil

மதத்தால் பிரித்து துண்டாடுமா கொரோனா..? விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்கள்..!

நோய் என்பது மதம் பார்த்து வருவதில்லை. மனிதர்களைப்போல நோய்களுக்கு மதம் பார்க்கத் தெரியாது.
Separated by Religion Social activists to raise awareness
Author
Tamil Nadu, First Published Apr 14, 2020, 4:29 PM IST
கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மத ரீதியாக வருவதில்லை. யாரும் கொரோனாவை விரும்பி வரவேற்பதில்லை. எனவே, யாரும் மற்றவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் உலக தலைவர்கள் வரை மன்றாடி கேட்டுக்கொண்டு வருகின்றனர். Separated by Religion Social activists to raise awareness

இயேசுவின் முக்கியமான இடமாக கருதப்படுகிற வாடிகனையும் கொரோனா வாட்டி வதைக்கிறது. அல்லாவை வணங்கும் அரேபிய தேசத்தையும் ஆட்டிப்படைக்கிறது. பாரபட்சம் காட்டாமலும் உலகத்தையே பாடாய் படுத்தி வரும் கொரோனாவை வைத்து மத வேறுபாட்டை கையாள்வது சில இடங்களில் கொரோனாவை விட கொடூர பிரச்னையாய் உருவெடுத்து வருகிறது. குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் தான் மாநாட்டில் பங்கேற்று இந்த நோயை பரப்பியதாக வேற்றுமை விதைத்து வருகின்றனர். 
Separated by Religion Social activists to raise awareness
கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் தற்கொலை செய்து கொண்டதை மத வெறியோடு கட்சிகள் விமர்சித்தால் அது மதசார்பின்மை. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தப்லிக் கொரானா பரப்புவதை கண்டித்தால் அது மதவெறியா? என உயிருக்கு போராடி வரும் நிலையிலும் மத அரசியலை புகுத்தும் அபாய நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடு மட்டும் இல்லாமல் போயிருந்தால் பல இடங்களில் இந்தக் குற்றச்சாட்டு மதக்கலவரங்கள் வெடித்திருக்கக்கூடும் என பதைபதைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆனால், அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்து பார்க்கக்கூட மனது விம்முகிறது. நோய் என்பது மதம் பார்த்து வருவதில்லை. மனிதர்களைப்போல நோய்களுக்கு மதம் பார்க்கத் தெரியாது. மதம் மனிதர்களுக்கு எதிரியல்ல. நோய் தான் மனிதர்களுக்கு எதிரி என்பதை பகுத்துணர்ந்தால் இங்கு வேற்றுமைக்கு இம்மியளவும் இடமில்லை. Separated by Religion Social activists to raise awareness

மதம் என்பது மருவி, மனிதம் தலைக்க வேண்டும். ஆனால், உயிர்களை காப்பாற்றிக் கொள்ள உலகமே போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நம் பொது எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனாவை ஒழிக்கவே ஒன்று திரள வேண்டுமே ஒழிய சக மனிதனை மதத்தால் பிரித்து பாரபட்சம் காட்டக்கூடாது என சமூக ஆர்வலர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள். 

மதம் வேண்டாம் எனக் கூறவில்லை. அதனை எங்கு வெளிப்படுத்த வேண்டும் என்கிற வரைமுறை இருக்கிறது. கோவிலுக்குள் மட்டும் இந்துவாக இருங்கள். மசூதிக்குள் மட்டும் முஸ்லிமாக இருங்கள். சர்ச்சுக்குள் மட்டும் கிறிஸ்வராக இருங்கள்.

மற்ற நேரத்தில் மத வேறுபாடு இல்லாத நல்ல மனிதனாக இருங்கள். கொரோனா வைரஸைவிட மதம் கொடூரமானது. கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல. உலகில் சாதி, மத, இனம் என எவற்றையும் பார்க்காது நீக்கமற தாக்கி வருகிறது. மனித இனத்தின் ஒரே எதிரியாக உருமாறி நிற்கிறது.

எந்த இந்துவும், முஸ்லீமும், கிறிஸ்தவரும் தனக்கு நோயை உருவாக்கிக் கொண்டு மாற்று மதத்தினருக்கு விதைக்க முன் வரமாட்டான். கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மத ரீதியாக வருவதில்லை. யாரும் கொரோனாவை விரும்பி வரவேற்பதில்லை. எனவே, யாரும் மற்றவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம்.Separated by Religion Social activists to raise awareness

கோரனோ வைரஸ் விட மதம் கொடூரமானது. கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல’
துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள். கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல. துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித்தள்ளுங்கள்.

கொரோனாவில் இறந்ததாக கருதிய ஒரு இந்து பெண்ணின் உடலை வாங்க பயத்தின் காரணமாக அவரது உறவினர்கள்  தகனம் செய்ய முன் வரவில்லை. முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடி தகனம் செய்தார்கள். அதுதான் மனிதாபிமானம். இவற்றை வலியுறுத்தி #unitedhuman என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் தங்களது ஒற்றுமை கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 
   
Follow Us:
Download App:
  • android
  • ios