திமுகவில் இணையும் விழாவில் செந்தில் பாலாஜி சொன்னதற்கும் மேல் அதகளப்படுத்தி மு.க.ஸ்டாலினை அசத்தியதில் அதிமுக கோஷ்டி ஆடிப்போய்க் கிடக்கிறது.

கரூரில் நடக்கும் இணைப்பு விழாவில் மாற்றுக்கட்சியில் இருந்து 25 ஆயிரம் தனது தலைமையில் கட்சியில் இணைவார்கள் என வாக்குறுதி கொடுத்திருந்தாராம் செந்தில் பாலாஜி. ஆனால் அதையும் தாண்டி 30 ஆயிரத்து 425 பேரை சேர்த்து அசத்தி இருக்கிறார் செந்தில் பாலாஜி. இதனை எதிர்பார்க்காத மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியில் உற்சாகமாகி விட்டாராம். அதே விழா ஏற்பாட்டையும் தனது சொந்தக் காசில் செந்தில் பாலாஜியே பிரம்மாண்டமாக செய்து கூட்டத்தை கூட்டியதில் முக.ஸ்டானின் குட் புக்கில் அதிரடியாக செந்தில் பாலாஜி இடம்பிடித்து விட்டதாக கூறுகிறார்கள்.

ஆரம்பமே அசத்தலாக தொடங்கிய செந்தில் பாலாஜியின் வேட்டை தொடரும் என்பதால் அவரது பரம எதிரியான தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக வட்டாரம் கலக்கமடைந்து கிடக்கிறது. 

செந்தில் பாலாஜி இணைப்பு விழாவுக்கு போட்டியாக கரூரில் இருந்து மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களை அதிமுகவில் இணைக்கும் போட்டி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் 3000 பேர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஆட்கள் கிடைக்காததால் 387 பேர் மட்டுமே எடப்பாடி தலைமையில் இணைந்தனர். அவர்களும் ஏற்கெனவே அதிமுகவில் இருப்பவர்கள் என விமர்சனம் கிளம்பியது. செந்தில் பாலாஜி இணைப்பு விழாவையும் இந்த நிகழ்வையும் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

ஆளுங்கட்சியால் 300 பேரை சேர்க்க முடியவில்லை. திமுக இணைப்பு விழாவில் தனியாளாக நிண்ரு 30 ஆயிரம் பேரை சேர்த்து தனது பலத்தை செந்தில் பாலாஜி காட்டி விட்டார். இதனால் ஆதிமுக கதிகலங்கிக்ன் கிடக்கிறது என்கிறார்கள் கரூர் பகுதி மக்கள்.