Asianet News TamilAsianet News Tamil

டி.டி.வி.தினகரனை அரவக்குறிச்சியில் காப்பியடித்த செந்தில்பாலாஜி... அலறும் அமைச்சர்..!

அரவக்குறிச்சி தொகுதியில் டோக்கனை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல முயற்சிகளை செந்தில்பாலாஜி மேற்கொண்டார்.

Senthil balaji, who insisted on the ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published May 20, 2019, 11:39 AM IST


டி.டி.வி.தினகரன் பாணியில் செந்தில் பாலாஜி வாக்குக்காக டோக்கனை விநியோகித்ததாக செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.   

இது குறித்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். Senthil balaji, who insisted on the ttv dhinakaran

தேர்தலின் போது எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி, 2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து வாக்காளர்கள் அனைவருக்கும் விநியோகித்தார். கையால் எழுதப்பட்ட டோக்கனையும் விநியோகித்துள்ளனர். அப்போது என்னுடைய அதிமுக ஊராட்சி செயலாளர் சிவக்குமார் டோக்கன் கொடுத்து அவரை கையும் களவுமாக பிடித்தார். 

என் மீது மின்சாரம் திருடியதாகவும் அதற்காக அபராதம் செலுத்தியதாகவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை செந்தில்பாலாஜி தேர்தல் களத்தில் பயன்படுத்தியுள்ளார். மின்சாரம் திருட வேண்டிய அவசியம் எங்களுக்கு வந்தது இல்லை.

Senthil balaji, who insisted on the ttv dhinakaran

அரவக்குறிச்சி தொகுதியில் டோக்கனை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல முயற்சிகளை செந்தில்பாலாஜி மேற்கொண்டார். வரும் 23-ம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறுவது போல் கூறி வருகிறார்கள். 23-ம் தேதி மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனும் வெற்றி பெறுவது உறுதி. Senthil balaji, who insisted on the ttv dhinakaran

2000 ரூபாய் ஜெராக்ஸ் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம், காவல்துறை என அனைத்து துறையிலும் புகார் அளித்து இருக்கிறோம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போதுமே சரியாக இருந்ததில்லை. இந்த ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். எனவே எல்லா இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios