திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிக்க சென்றபோது கேள்வி கேட்ட ஒருவரை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் தம்பிதுரைக்கு ஆதரவாக தேர்தல் களத்திம் வாக்கு சேகரித்த செந்தில் பாலாஜி டி.டி.வி.அணிக்கு தாவி கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார்.

 

தற்போது ஜோதிமணியை வெற்றி பெறவைத்து கரூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என ஸ்டாலினிடம் சபதம் செய்திருக்கிறார். அவர் ஜோதிமணியுடன் அனைத்து இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் ’இலங்கையில் தமிழ் இனத்தை கொன்று குவித்த ராட்சசி குழுவிற்கு ஆரத்தி எடுப்பதா?’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"

இதனை கேட்ட செந்தில் பாலாஜி- ஜோதிமணி ஆதரவாளர்கள் அந்த நம்பரை யார்யா நீ..? இந்த ஊரா? எனக்கேட்டுக் கொண்டே அவரை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனை தடுக்காமல் செந்தில் பாலாஜியும், ஜோதி மணியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 
சில மாதங்களுக்கு முன் விமானத்தில் தமிழிசையை நோக்கி குரல் எழுப்பிய சோபியாவுக்காக ஆதரவு குரல் கொடுத்து கருத்து சுதந்திரம் என மேடை தோரும் முழங்கினார் இந்த ஜோதிமணி. தனக்கு நேரும்போது அந்த கருத்துச் சுதந்திரத்தை எங்கு அடகு வைத்தாரோ தெரியவில்லை என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.