சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தார் செந்தில் பாலாஜி. கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது  செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார். ஆனால் இதற்க்கான மறுப்பையோ, ஒப்புதலையோ  யாருமே சொல்லவில்லை ஆனால்  ஆனால் இதற்கான அதிகாரபூர்வமாக சற்று முன்பு ஸ்டாலின் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். 

செந்தில் ஸ்டாலினின் கரம் பற்றி தி.மு.க.வில் ஐக்கியமானபோது துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, கரூர் சின்னசாமி, கே.சி.பழனிசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர். ஸ்டாலினுக்கு தகதகக்கும் மஞ்சள் நிற பொன்னாடையை போர்த்தி, தலை குனிந்து செந்தில்பாலாஜி வணங்கி நிமிர்ந்ததும், அருகில் நின்ற துரைமுருகன், ‘என்ன செந்தில்  கட்சி கரையில்லாம வேட்டி கட்டியிருக்கீங்க? நம்ம கட்சி கரைவேஷ்டியை கம்பீரமா கட்டிட்டு வந்திருக்க வேண்டிதானே?’ என்று குறும்பாக பேசி சிரிக்க, ஸ்டாலினும் கலகலத்திருக்கிறார்.

ஆம் எந்த கட்சி கரையுமில்லாமல் சாதார நிறத்திலான கரை வேஷ்டியைத்தான் கட்டியபடி வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி அதைத்தான் துரைமுருகன் ஜாலிகேலி செய்திருக்கிறார்.