செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து ஜோதிமணி அடாவடி... கலெக்டர் வீட்டுக்குள் புகுந்து அராஜாகம்..!
தனக்கு ஆதரவாக செயல்படும்படி மிரட்டுவதாக கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீது கரூர் மாவட்ட ஆட்சியரும்,
மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆதரவாக செயல்படும்படி மிரட்டுவதாக கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீது கரூர் மாவட்ட ஆட்சியரும்,
மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ளார் ஜோதிமணி. இவருக்கு திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர்
செந்தில்பாலாஜி பக்கபலமாக இருந்து வருகிறார். ஜோதிமணியை வெற்றிபெற வைத்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு
செயல்பட்டு வருகிறார் செந்தில் பாலாஜி. அதற்கு மற்றொரு காரணம் அரசியலில் தனது பரம எதிரியாக உள்ள தம்பிதுரை இந்தத்
தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் அலுவலகத்திற்குள் செந்தில்பாலாஜி எஸ்.பி மீது கையை வைத்து இடித்து தள்ளினார்.
அங்கு ஜோதிமணியும் அடாவடியாக நடந்து கொண்டார். அடுத்து ஒரு கிராமத்தில் செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் பிரச்சாரத்திற்கு
சென்றபோது, எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மணி நேரமாக இந்தப்போராட்டம் நடந்தது.
இந்நிலையில் ஜோதிமணி தனக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என தன்னை மிரட்டுவதாகவும், 100க்கும் மேற்பட்ட ஜோதிமணி ஆதரவாளர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள். எனக்கு மட்டுல்ல. தேர்தல் அலுவலர்கள் அனைவரது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிலும், தேர்தல் ஆணையத்திடமும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகார் தெரிவித்துள்ளார். தொகுதி வேட்பாளர் மீதே மாவட்ட ஆட்சியர் புகார் தெரிவித்துள்ளது கரூர் தொகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.