அதிமுகவாக இருந்தாலும் சரி, அது திமுகவாக இருந்தாலும் சரி, தனக்கென தனி முத்திரை பதிப்பதில் செந்தில் பாலாஜிக்கு நிகர் செந்தில்பாலாஜி தான். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவார் அந்த அளவிற்கு கெட்டிக்காரர் அவர். கட்சித் தலைமை உத்தரவிட்டுவிட்டால் அதை செயல்படுத்தாமல் விடமாட்டார்
சீனியர் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுகவில் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது என ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அவர் கட்சி மாறி வந்தவராக இருந்தாலும் பல மூத்த அமைச்சர்களை காட்டிலும் அவருக்கே முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது, அவர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கை பெற்றவராக மிக அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இது மூத்த அமைச்சர்களையே கலக்கமடைய வைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவாக இருந்தாலும் சரி, அது திமுகவாக இருந்தாலும் சரி, தனக்கென தனி முத்திரை பதிப்பதில் செந்தில் பாலாஜிக்கு நிகர் செந்தில்பாலாஜி தான். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவார் அந்த அளவிற்கு கெட்டிக்காரர் அவர். கட்சித் தலைமை உத்தரவிட்டுவிட்டால் அதை செயல்படுத்தாமல் விடமாட்டார். இதனால் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் குட் புக்கில் எப்போதும் செந்தில் பாலாஜிக்கு தனியிடமுண்டு. முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து அமமுக விற்கு சென்று பின்னர் திமுகவுக்கே திரும்பி வந்தவர்தான் செந்தில்பாலாஜி. அவர் கரூர் மாவட்டத்துக்காரர் என்பதால் மாவட்டத்தில் முக்கிய பதவிகளை கொடுத்து பெருமைப்படுத்தினார் ஸ்டாலின். கொடுத்த வேலையை கனகச்சிதமாக முடித்து சாதித்துக் காட்டும் செயல்வீரர் செந்தில் பாலாஜி என ஸ்டாலின் புகழும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. திமுகவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவர் அமைச்சராகியிருப்பது திமுக சீனியர்களுக்கே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் வாஷ் அவுட் என்றுதான் சொல்ல வேண்டும். கொங்குவில் மொத்தம் பத்து தொகுதிகளை அதிமுகவே கைப்பற்றியது. இந்நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலிலாவது கொங்குவை திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என முடிவெடுத்த ஸ்டாலின் திமுகவில் கொங்குவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர் தேர்ந்தெடுத்தது என்னவோ செந்தில் பாலாஜியைதான். அந்த அளவுக்கு செந்தில் பாலாஜி திடமாக செயல்படுவார் என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம். எதையும் துணிச்சலாக எதிர்த்து செயலாற்ற கூடியவர், பொருளாதார ரீதியாக சிறப்பாக செயல்படுவார், எஸ்.பி வேலுமணிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு திறன் கொண்டவர் செந்தில்பாலாஜி என்பதினால் அவரை களமிறக்கினார் ஸ்டாலின்.
தனக்கே உரிய பாணியில் அதிரடி காட்டினார் செந்தில் பாலாஜி, கால் நூற்றாண்டாக அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை ஒரு சில மாதங்களில் திமுகவின் கோட்டையாகவே மாற்றி காட்டியுள்ளார். கொங்கு மண்டல்த்தில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எது நடக்காது என்று பலரும் கூறி வந்தனரோ அதை நடப்பித்து காட்டியுள்ளார் செந்தில் பாலாஜி, மேற்கே உதித்த சூரியன் என செந்தில்பாலாஜியை திமுக தலைவர் ஸ்டாலின் நயந்து வியந்து பாராட்டியுள்ளார். இதனால் திமுகவின் மாபெரும் போர்ப்படை தளபதியாக செந்தில் பாலாஜி மாறியுள்ளார். இந்நிலையில் மூத்த ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் திமுகவில் செய்தில் பாலாஜியில் வளர்ச்சி அபரிதமானது என்றும், மூத்த அமைச்சர்களே அஞ்சும் அளவுக்கு அவரது வளர்ச்சி உள்ளது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கெடுத்துள்ள பேட்டியில் விவரம் பின்வருமாறு:- திமுக ஆட்சிக்கு வந்த உடனே கொங்கு பகுதிக்கு பொறுப்பாளர் பதவி செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுவிட்டது, அவரும் ஏராளமான பணத்தை செலவழித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். எந்தத் துறையாக இருந்தாலும் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்படுகிறது என்றால் அவர் அந்த அளவிற்கு செயலாற்ற கூடியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல அவர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர், தவறு செய்தவர்கள் எப்போதும் ஒரு பதற்றத்தில் இருப்பார்கள் அதனால் தங்களது இடத்தை காப்பாற்றிக்கொள்ள எப்போதும் விழிப்புடன் நடந்து கொள்வார்கள் இதுபோன்ற ஒரு சூழலில் தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து வருகிறார். இருக்கிற எல்லா துறைகளைக் காட்டிலும் அதிக வருமானம் வரக்கூடிய மதுவிலக்கு மற்றும் மின்சார துறை செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டுள்ளது.

எந்த சீனியர் அமைச்சருக்கும் இப்படி ஒரு பதவி இல்லை, கட்சி மாறி வந்த செந்தில் பாலாஜிக்கு வழங்கியிருக்கிறார்கள். அதேபோல திமுகவில் உள்ள எந்த சீனியர் அமைச்சர்களும் தினமும் காலையில் எழுந்து உதயநிதிக்கு போன் செய்து என்ன நடக்கிறது என்ற விஷயங்களை அப்டேட் செய்வது கிடையாது. ஆனால் செந்தில்பாலாஜி அதை செய்கிறார், வரவு செலவு நடப்புகளை அவர் துள்ளியமாக ரிப்போர்ட் செய்கிறார். ஆனால் இதை மூத்த அமைச்சர்களிடம் எதிர்பார்க்க முடியாது அவரது துறை தகவல் மட்டுமல்லாமல் பிற துறையைச் சார்ந்த தகவல்களையும் அவர் கூறுகிறார். இது இப்போது பல சீனியர் அமைச்சர்களுக்கும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால் எல்லா அமைச்சர்களும் செந்தில்பாலாஜியின் மீது கடுப்பில் உள்ளனர். தங்களைப் பற்றி எதையாவது செந்தில் பாலாஜி போட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்ற அச்சம் சீனியர் அமைச்சர்களிடம் உள்ளது. இவ்வாறு சவுக்கு சங்கர் தனது பேட்டியில் கூறியுள்ளார்..
