இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக பரவி வருகிறது. வேட்பாளர்கள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2000ஐ தாண்டி வருகிறது. 

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நல்லகண்ணுவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.