கடந்த பத்து ஆண்டுகளாக கிரிஷ்ணகிரி திமுக செயலாளராக சிட்டிங் MLA வும் மான மாசெ செங்குட்டுவன் இவரது ஆதரவாளர் அஸ்லாம்  ஆவார். இன்று மதியம் கிரிஷ்ணகிரி நகரில் முக ஸ்டாலினுக்கு பேனர் வைப்பது தொடர்பான பிரச்சனையில் மாசெ செங்குட்டுவனின் ஆதரவாளரான அஸ்லம்  கோஷ்ட்டிக்கும், ஒரு வாரத்திற்கு முன்பு கட்சியில் மீண்டும் இணைந்த மாஜி அமைச்சர் முல்லை வேந்தன் ஆதரவாளரான நவாப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

முல்லை வேந்தன், அருகில் உள்ள தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாபிரெட்டிபட்டியில் வசிக்கும் முல்லைவேந்தனுக்கு, கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் நகர செயலாளரான நவாப் தீவிர ஆதரவாளர் ஆவார். முல்லைவேந்தன், கடந்த வாரம் ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்விற்கு கிரிஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 5 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்களை அழைத்து வந்துள்ளார். 

முல்லைவேந்தனும் செங்குட்டுவனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவருக்கும் இடையே  விருப்பும் வெறுப்பும் எதுவும் கிடையாது இருந்த போதும் முல்லை வேந்தனை மீண்டும் கட்சியில் கொண்டு வந்ததில் மாசெ செங்குட்டுவன் ரசிக்கவில்லையாம். போதாத குறைக்கு தனது மாவட்ட  நிர்வாகியான  நவாப் முல்லைவேந்தனுக்கு ஆட்களை அழைத்துச் சென்றது செங்குட்டுவனுக்கு கடுப்பை ஏற்படுத்தியதாம் . 

இந்த சூடு குறையாத நிலையில் செங்குட்டுவன் ஆதரவாளர் அஸ்லாமுக்கும், முல்லைவேந்தன் ஆதரவாளர் நவாப்க்கும் இடையே பேனர் வைப்பதில் வைத் தகராறு ஏற்பட்டு கைக்கலப்பக மாறியது. இந்த ரணகளத்தில் முல்லைவேந்தனின் மற்றொரு ஆதரவாளருமான சமியுல்லாவை அஸ்லமின் ஆட்கள்  அரிவாளால் வெட்டியதில்  மண்டைப் பிளந்து ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. இதனால் அலறித் துடித்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவசர சிகிச்சையில் உள்ளவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட திமுக கோஷ்டிப் பூசலால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இது ஒருபுறமிருக்க திமுக பிரமுகர்களான  நவாப் மற்றும் அஸ்லம் கோஷ்ட்டிகள் தங்களது சொந்தப் பாகைகளைத் தீர்த்துக் கொள்ள விஐபிகளான முல்லைவேந்தன் மற்றும் செங்குட்டுவன் பெயர்களை  தங்களது சுயலாபத்துக்காக வீதிக்கு இழுப்பதாக மற்றொரு சாரார் பேசிக் கொள்கின்றனர். இதனிடையே திமுக நகர செயலாளர் நவாப் மற்றும் அஸ்லம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து