யார் எங்கே சென்றாலும் அதிமுகவை உடைக்க முடியாது என அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஸ்டாலினுக்கு சூசகமாக சவால் விடுத்துள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பண்ரூட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய செங்கோட்டையன், குழப்பத்தை விளைவிக்கும் கும்பலுடன் பி.எச்.பாண்டியன் இணைந்துவிட்டார் எனவும், பதவியை விட கட்சியே முக்கியம் என நினைப்பவர்கள்தான் உண்மையானவர்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் சிலர் பிளவுகளை ஏற்படுத்த முற்படுகிறார்கள் எனவும், யார் டெல்லி சென்றாலும், அமெரிக்கா சென்றாலும் அதிமுகவை பிளக்க முடியாது என ஸ்டாலினுக்கு மறைமுகமாக சவால் விடுத்தார்.

அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர் சசிகலா முதல்வராவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.