அதிமுக சார்பாக உங்களை அழைத்து உரிய நேரத்தில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த சந்திப்பு , ஒரு இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் வேண்டியது அமைதி. பதவி பெரிதா கட்சி பெரிதா என்றால் கட்சிதான்.
அதனால் தான் 1977 முதல் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். பலவேறு பதவிகள் பொறுப்புகளை வகித்து வருகிறேன். முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பத்திரிக்கையாளர்களை அழைத்து கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.
1987 ல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்தது அப்போது சட்டமன்றத்தில் வாக்குகளை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். பல பெரிய தலைவர்கள் இருந்தனர். அன்று பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன்.

அன்றைய குழப்பத்திற்கு காரணமே அவர்தான் அவர் எங்களை வெளியேற்றியதில் தான் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின்னர் இயக்கம் ஒன்றிணைந்து இரட்டை இலையை பெற ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை. அதன் பின்னர் திருநாவுக்கரசர் கட்சியில் இணைந்து அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்டார். 1996 ல் தனித்து போட்டியிட்டு இருவரையும் ஜனார்த்தனம் தோல்வியடைய காரணமாக இருந்தார் .
1996 ல் அம்மா மீது வழக்கு தொடர்வதற்கே காரணமாக இருந்தவர் இவர்தான் , நான் சொல்லவில்லை ராதாபுரம் அப்பாவு குறிப்பிட்டார். இன்று அம்மாவுக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்கு யார் காரணம் முதல் காரணமாக இருந்தது இவர்தான்

ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டபோது அவருக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்று வழக்கு தொடர்ந்தவர் பாண்டியன். அம்மா அவர்கள் முதலவராக இருந்த போது இவரது குடும்பத்தில் 5 பேருக்கும் பதவி கொடுத்தவர் அம்மா. அதற்கு இவர் நன்றி கடன் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர் கழகத்திற்கு எதிராக செயல் படுகிறார். துரோகிகளுடன் சேர்ந்து இவ்வாறு நடக்கிறார்.

1991 ல் ராஜிவ்காந்தி அம்மாவின் இல்லம் வந்த போது அம்மா ராஜிவ்காந்தியிடம் சின்னம்மா பற்றி சொன்னபோது எனக்கு நட்பின் அருமையை காண்பித்தவர் என்று அம்மா சொன்னார். ஒரு புறம் துரோகிகள் பின்னே சேர்ந்து கட்சியை பற்றி எதிர்கருத்து பேசுகிறார். அவர் பற்றிய நான் சொன்னது எல்லாம் உண்மை. அவர் துரோகிகளுடன் சேர்ந்து நடப்பதன் மூலம் இயக்கத்தின் வலிமையை குலைத்துவிட முடியாது.
யார் தடுத்தாலும் சின்னம்மா முதல்வராக வருவார். அவர் முதல்வராக வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது , இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
