Asianet News TamilAsianet News Tamil

தனி டி.வி சேனல் தொடங்கும் செங்கோட்டையன்... அசரவைக்கும் அதிரடி திட்டம்..!

மாணவர்களின் கல்வி நலனுக்காக தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan from a separate TV channel
Author
Tamil Nadu, First Published May 7, 2019, 11:47 AM IST

மாணவர்களின் கல்வி நலனுக்காக தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.sengottaiyan from a separate TV channel

இது தொடபாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’தனி தொலைக்காட்சி சேனல் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீன கல்விமுறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் திட்டம் இருக்கிறது. sengottaiyan from a separate TV channel

ஏற்கனவே 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும். இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.

sengottaiyan from a separate TV channel

பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்து வரும் நிலையில் தனியாக சேனல் ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios